விக்ரம் 64 படை இயக்குனர் யார்?
நடிகர் விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து யார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது இன்னும் உறுதியாக வில்லை. சமீபத்தில் ரஜினி 173-வது படத்தில் இருந்து வெளியேறிய சிபி சக்கரவர்த்தியுடன் விக்ரம், தற்போது பேச்சு வார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிளாஸ்ட் படத்தை இயக்கிய சுபாஷ் கே ராஜாவை தொலை பேசியில் அழைத்து விக்ரம் பாராட்டியுள்ளார். கூடுதலாக தனக்கு ஏதாவது கதை வைத்திருந்தால் கூறுங்கள் படம் பண்ணலாம் எனவும் அவர் கேட்டதாக தெரிகிறது.