அனுஷ்கா படத்துக்கு என்னதான் பிரச்சனை

அனுஷ்கா படத்துக்கு என்னதான் பிரச்சனை
நடிகை அனுஷ்கா சற்று இடைவேளைக்குப் பிறகு,கிரிஷ் இயக்கியுள்ள ‛காட்டி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், ஏற்கனவே ஒரு ரிலீஸ் தேதி அறிவித்தனர். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி முடியாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஜூலை 11ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் அந்த ரிலீஸ் தேதியும் தற்போது மாறப்போவதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. காரணம் படத்தின் சிஜி பணிகள் இன்னும் முடிவடைய வில்லையாம். எப்படியாவது பணிகளை இரவு பகலாக முடித்து திட்டமிட்டபடி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் முயற்சி செய்து வருகிறதாம்.

Comments (0)
Add Comment