அடுத்த படம் எது? மௌனம் கலைந்த விக்ரம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் கேரட்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஒரு சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வீரதீரசூரன்’.
இதில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். இந்நிலையில் விக்ரம் வெளியிட்டுள்ள சமூக வலைதளத்தில் பதிவில், சில நேரங்களில் மவுனம் என்பது தயார்படுத்தி கொள்வது. என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். தற்போது நான் பெரிதும் மதிக்கும் 4 இயக்குநர் களுடன் புதியபடங்களை தொடங்குவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை என பதிவிட்டுள்ளார்.