சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து பெரிய திரைக்கு வந்துள்ளோம்: பூர்ணிமா ரவி

சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து பெரிய திரைக்கு வந்துள்ளோம்: பூர்ணிமா ரவி
“யெல்லோ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “யெல்லோ”. இப்படத்தை கோவை பிலிம் பேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரித்துள்ளார்.பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை பூர்ணிமா பேசியது, இந்த படத்தில் நிறையக் கற்றுக் கொண்டோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம்.

Comments (0)
Add Comment