நாங்க பெஸ்டி தான்: சமந்தா- ஸ்ரீ லீலா
பிரபல நடிகையான சமந்தா புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா…’பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதேபோல் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீ லீலா புஷ்பா-2 படத்தில் “கிஸ் கிஸ் கிஸ்கா..”பாடலுக்கு ஆடினார்.
இந்த 2 பாடலுமே ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது சமந்தா,
ஸ்ரீ லீலா இருவருமே பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றனர். இருப்பினும் சமந்தாவுக்கும் ஸ்ரீ லீலாவுக்கும் இடையே மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் இருவரும் ஒன்றாக பங்கேற்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.