விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்
தொழிலதிபரான சூர்யா, ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். திருமண உறவின் மீது நம்பிக்கையில்லாத அவருக்கு, அம்மா ராதிகா திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில் அம்மாவின் ஆசைக்காக வெளிநாட்டை சேர்ந்த ஒரு மருத்துவருடன் தொலைபேசி மூலம் பேசி பழகத் தொடங்குகிறார் சூர்யா‌. ஒரு வருடம் கழித்து ஆண் குழந்தையுடன் சென்னை வரும் சூர்யா, அதை தன் மகன் என அறிமுகப்படுத்துகிறார். இந்த நிலையில் மமிதா பைஜூவும் சூர்யா வாழ்க்கைக்குள் வருகிறார். உண்மையில் அந்த குழந்தை

யாருடையது? மமிதா பைஜு யார்? என்பதே மீதி கதை. ஹீரோயின் பஞ்ச் டயலாக் மாஸ் காட்சி என எதுவும் இல்லாமல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. அவருடன் போட்டி போட்டு நடித்துள்ளார் மம்தா பைஜு. இவர்கள் இருவருடன் ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பிளஸ். ரவீனா தாண்டன் முக்கியமான ஒரு காட்சியில் வந்து செல்கிறார். சமூகத்திற்கு தேவையான ஒரு கதையை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக இயக்குனர் வெங்கட்ரரி சொல்லி இருக்கிறார். இருப்பினும் முதல் பாதியில் உள்ள சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் சற்று குறைவுதான்.ஜி.வி. பிரகாஷின் இசை மற்றும் நிமிஷ ரவி ஒளிப்பதிவு சூப்பர்.

Comments (0)
Add Comment