முத்த காட்சி சுவாரசியம் சொன்ன விஷ்ணு விஷால் (அல்லது)
எனக்கு கிடைக்கல; என் தம்பிக்கு கிடைத்தது :விஷ்ணு விஷால்
கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.இதில் ஹீரோவாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா அறிமுகமாகிறார்.சோசியல் மீடியா பிரபலம் மிதிலா பால்கர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜூலை மாதம் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து ருத்ரா பேசும் போது, முதல் படத்தில் முத்தக் காட்சியில் நடித்தது டென்ஷனாக இருந்தது. அதுவும் 3 லிப் லாக் காட்சிகள் என்றவுடன்,விஷ்ணு விஷால் குறுக்கிட்டு, நான் 21 படம் நடித்து விட்டேன். எனக்கு இதுவரை ஒரு முத்த காட்சி கூட அமையவில்லை. என் தம்பிக்கு முதல் படத்திலேயே மூன்று முத்த காட்சி என சிரித்தபடி ஏக்கமாக கூறினார்.