அருண்ராஜா காமராஜ் படத்திலிருந்து விலகிய விஷ்ணு விஷால்

அருண்ராஜா காமராஜ் படத்திலிருந்து விலகிய விஷ்ணு விஷால்
இயக்குனர் அருண்ராஜா காமராஜ், விஷ்ணு விஷால் ஆகியோர் புதிய படமொன்றில் இணைந்து பணியாற்ற இருந்தனர்.ஆனால் படத்திலிருந்து விஷ்ணு விஷால் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.இது குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, கடந்த 10 மாதங்களாக இந்தப் படத்திற்காக தீவிரமாக தயாராகி வந்தேன். கட்டா குஸ்தி 2 பட ரிலீசுக்கு பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. ஆனால், சமீபத்தில் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கலால் இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள் ளோம்.இது எனக்கும், அருண்ராஜாவுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்றார்.

Comments (0)
Add Comment