விக்ரம் பிரபுவின் 26-வது படம் டேக் ஆப்
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான அதிரடி மற்றும் கமர்ஷியல் ஆக்சன் திரில்லர் படமாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.மேலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.