சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விக்ரம் பிரபு

சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விக்ரம் பிரபு
எம்.ஜி.ஆர்,சிவாஜி அகாடமி சார்பில் 41-வது விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.இதில் நடிகர் ரஜினியின் 50 ஆண்டு திரை உலக சாதனையையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திரை உலகில் 50 ஆண்டுகள் திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் கே.பாக்யராஜூக்கு திரைக்கதை மன்னன் விருது வழங்கப்பட்டது.மேலும்,கலைஞர் விருது-நடிகர், இயக்குனர் ஆர். பார்த்திபன்,லயன் லேடி ஜெயலலிதா விருது- கவுதமி,எம்.ஜி.ஆர் விருது- இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், சிவாஜிவிருது- இயக்குனர் பி.வாசு, ஏ.வி.எம்.சரவணன் விருது- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கேப்டன் விஜயகாந்த் விருது-நளினி, பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது- கலை இயக்குனர் தோட்டா தரணி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் படத்தை திறம்பட இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருது சிறை படத்திற்காக விக்ரம் பிரபுவுக்கு வழங்கப்பட்டது. மேலும் நடிகர் அப்பு குட்டி, டைரக்டர் கணேஷ்பாபு, சண்முக பாண்டியன், பிரிகிடா சகா உப்பட பல நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Comments (0)
Add Comment