விஜய் கையால் சிறந்த நடிகர் விருது வாங்க வேண்டும்: எஸ்.ஜே.சூர்யா
விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது பல படங்களில் வில்லன் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, விஜய்யுடன், நண்பன், மெர்சல், வாரிசு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துதெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,வாரிசு படப்பிடிப் பின் போது என்றாவது ஒருநாள் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை உங்கள் கைகளில் இருந்து பெற வேண்டும் என்று உங்களிடம் சொன்னேன்.என் பேச்சு பாதி உண்மையாகி விட்டது.இப்போது உங்களிடம் இருந்து அந்த விருதை வாங்க நான் சிறந்த நடிகர் என்பதை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டும் நண்பா சார். இந்த மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றார்.