விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஆகாயம் ” பட பர்ஸ்ட் லுக்

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஆகாயம் ” பட பர்ஸ்ட் லுக்
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம் “.இதை “தினந்தோறும்” படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நாகராஜ் இயக்குகிறார்,”கன்னி மாடம்” படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், இந்துமதி மணிகண்டன், தீபா, சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய,ரகுநந்தன் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment