விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா டும் டும் டும்..

விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா டும் டும் டும்..
டோலிவுட் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம் உதய்ப்பூரில் இன்று நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தூரம் உள்ள ஆரவல்லி மலை உச்சியில் அமைந்து ள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. மலைப் பகுதியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட்டில் 117 அறைகள் உள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் தங்கலாம்.திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட ங்கள் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஹால்டி, சங்கீத் விழாக்கள் நடைபெற்றது.இன்று காலை குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலை யில் இருவரது திருமணம் நடைபெறுகிறது.

Comments (0)
Add Comment