தியேட்டர் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க: ரித்விகா
பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் தி டார்க் ஹெவன்.இதில் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்பட பலர் நடித்திருந்தனர். சஸ்பென்ஸ் திரில்லரான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ரித்விகா பேசியது, இந்தப் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடி கொண்டி ருக்கிறது. ஆனாலும் இது போதாது. இந்தப்படம் இன்னும் நிறைய பேரிடம் போய்ச் சேர வேண்டும். மக்கள் பழையபடி அனைத்துப் படங்களையும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் . அப்போது தான் அந்தத் திரையரங்க அனுபவம் கிடைக்கும் .நான் முன்பே சொன்னேன் இந்தப் படம் ஒரு திரையரங்கு அனுபவத்திற்கான படம் என்று. ஓடிடியில் வரும் வரை காத்திருக்க வேண்டாம். எந்தப் படமாக இருந்தாலும் தியேட்டருக்கு வந்து பாருங்கள்.அப்போது தான் சினிமா வளர்ச்சி பெறும் என்றார்.