தேசிய விருது விழாவில் மகன்களுடன் தனுஷ்
இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் நடந்தது. இதில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் தேசிய விருதை பெற்றுள்ளது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை இப்படம் பெற்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை பெற்றுக்கொண்டார். அதே படத்திற்காக சிறப்பான நடிப்பை வெளிப்படு த்திய நடிகர் தனுஷ்க்கு ஸ்பெஷல் மென்சன் தேசிய அங்கீகார சான்று கிடைத்தது. அதை பெறுவதற்காக தனது மகன்கள் உடன் விழாவுக்கு தனுஷ் வந்திருந்தார்.