விஜய்யால் சினிமாவுக்கு பெருமை: ராம்சரண்
புஜ்ஜி பாபு சேனா இயக்கத்தில் ராம்சரன், ஜான்வி கபூர் நடிப்பில் வரும் 4-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் பெத்தி.இதன் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ராம்சரண் கூறியது, தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய், தனது நட்சத்திர அந்தஸ்தையும், சினிமா வாழ்க்கையின் உச்ச கட்டத்தையும் துறந்து பொது சேவைக்கு வந்துள்ளார். சினிமா துறையை சேர்ந்தவன் என்ற முறையில் அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறே ன். விஜய் தமிழக முதல்வரானது சினிமாவிற்கு பெருமை. அவரை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு எனது நன்றி என்றார்.