விஜய் ஆண்டனியின் வினோத பிரமோஷன்

விஜய் ஆண்டனியின் வினோத பிரமோஷன்
மார்கன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சக்தித் திருமகன். அவரின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற விஜய் ஆண்டனி, மேடைக்கு வருபவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்கு பதிலாக டம்மி துப்பாக்கியால் சுட்டு வித்தியாசமாக வரவேற்றார். அதன் பிறகு பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கு பதிலாக, பிரியாணியை கேட்காக வெட்டி கொண்டாடி னார். அதோடு மார்கன் படத்தில் ஆமையை மேடையில் வைத்து பிரமோஷன் செய்ததால் படம் வெற்றி பெற்றது எனக் கூறி ஆமைக்கு சால்வை,மாலை அணிவித்து வித்தியாசமா க பிரமோஷன் செய்தார்

Comments (0)
Add Comment