வெற்றி வரும் தோல்வி வரும் கூடவே ஜால்ராவும் வரும்: கமல் பேச்சு

வெற்றி வரும் தோல்வி வரும் கூடவே ஜால்ராவும் வரும்: கமல் பேச்சு
சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில்”ராஜகோபுரங்கள்” என்ற தலைப்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்து வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு,பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் சிலைகளை திறந்து வைத்தார். அதன் பிறகு கமல் பேசியது, “பாரதிராஜா, பாக்யராஜ் இருவருடனும் பணியாற்றியவன் என்பதில் பெருமை கொள்கிறேன். மரணம் எல்லோருக்கும் நிகழக்கூடியதுதான். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த பணிகள் மிகப்பெரியவை. இருவரும் தமிழ் சினிமாவில் ஆழமாக வேர் ஊன்றியவர்கள். பாரதிராஜா தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்தவர் தோல்விகளுக்கு அஞ்சாதவர். ‛பாரதிராஜா போல ஒரு கலைஞன் இல்லை” என்று இயக்குனர் கே.பாலசந்தர் கூறுவார். அப்படி ப்பட்ட ஜாம்பவான்களுடன் பயணித்தது எனக்கு பெருமை.வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் இருவரும் பயணித் தார்கள். பாரதிராஜா என்பவர் தனி மனிதர் அல்ல; சினிமாவில் அவர் ஒரு பெரிய குடும்பம். அவரை நான் பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். பலமுறை என் வீட்டில் வந்து படுத்துத் தூங்கியிருக்கிறார். அவரை வெறும் இயக்குனர் என எப்படி சொல்வது? அவர் என் குடும்பம். இவ்வாறு பேசினார்.

Comments (0)
Add Comment