கதை நாயகன் ஆகும் விக்கல்ஸ் விக்ரம்

கதை நாயகன் ஆகும் விக்கல்ஸ் விக்ரம்
ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம் ,டிஜிட்டல் திரை நட்சத்திரம் என பன்முகத் திறமை கொண்ட விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதை நாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் ஜோடியாக ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா நடிக்கிறார். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Comments (0)
Add Comment