வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு
விடுதலை படத்துக்கு பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் வட சென்னை 2 அல்லது சூர்யா நடிக்கும் வாடிவாசல் ஆகிய படங்களில் ஏதாவது ஒரு படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் தற்போது சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வடசென்னை பகுதி கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பாக சிம்பு, வெற்றிமாறன் இடையே கதை விவாதம் முடிவடைந்து விரைவில் ஷூட்டிங் தொடங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளது.