வெற்றிக்கு ஜோடியான பிரியாலயா

வெற்றிக்கு ஜோடியான பிரியாலயா
“தீர்ப்புகள் விற்கப்படும்” படம் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண் குமார் எழுதி இயக்கியுள்ள படம் “பிளாக் கோல்டு”.இதில் வெற்றி ஹீரோவாக நடிக்க, பிரியாலயா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரித்துள்ளார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறை வடைந்துள்ளது.ஒரு இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் படத்தின் டிரெய்லரும், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

Comments (0)
Add Comment