ஐயப்பன் படத்தின் டைட்டிலை வெளியிட்ட வெங்கட் பிரபு

ஐயப்பன் படத்தின் டைட்டிலை வெளியிட்ட வெங்கட் பிரபு
தந்த்ரா பிலிம்ஸ் சார்பில் ஜே.கே.சரவணா ஒரே நேரத்தில் இரண்டு புதிய ஆன்மீக படங்களை தயாரிக்கிறார். ஐயப்பனின் மகிமையை சொல்லும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.இதில் முதல் படம் “தத் த்வம் அஸி” (அதுவாகவே நீ இருக்கிறாய்).இது சமகாலத்தில் நடக்கும் ஆன்மீக ஆக்ஷன் திரைப்படமாக, சுவாமி ஐயப்பன் பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.இப்படத்தை,”மாளிகப்புரம்” படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். 2-வது படமாக “ஆர்ய கேரள வர்மன்” என்ற வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படமாகும். இப்படம் சுவாமி ஐயப்பனின் சுயசரிதை கதையாகும்.இதை ஜே.கே. சரவணா மற்றும் ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகிறார்கள்.

Comments (0)
Add Comment