வசந்த் ரவியின் ‘இந்திரா’ படம் 22ல் ரிலீஸ்

வசந்த் ரவியின் ‘இந்திரா’ படம் 22ல் ரிலீஸ்
அறிமுக இயக்குனர் சபரீஸ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்துள்ள படம் ‘இந்திரா’. இதில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, அஜ்மல் இசையமைத்து ள்ளார்.ஜேஎஸ்எம் மூவி புரொடக்ஷன் மற்றும் எம்பரர் என்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ட்ரடென்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் வெளியிடுகிறார்.வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் படம் பற்றி இயக்குனர் சபரீஸ் நந்தா கூறியது, ஒரு பார்வையற்ற போலீஸ் அதிகாரிக்கும், கொலையாளிக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் கதை. ரசிகர்கள் இதுவரை வரை பார்க்காத ஒரு திரில்லர் கதைக்களம் இருக்கும் என்றார்.

Comments (0)
Add Comment