“வாரணாசி” எனது கனவு படம்: மகேஷ் பாபு
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்திற்கு வாரணாசி என டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஹீரோயினாக பிரியங்கா சோப்ராவும், வில்லனாக பிரித்திவிராஜ் சுகுமாரும் நடித்துள்ளனர்.கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிரத்தியேக வீடியோ வெளியீட்டு விழா ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் லட்சக்கணக் கான ரசிகர்கள் முன்னிலை யில் நடந்தது. இதில் மகேஷ் பாபு பேசியது, இது என்னுைடய கனவு படம் . வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரும் ஒரு வாய்ப்பு. இதற்காக நான் கடுமையாக உழைத்து அனைவைரயும் பெருமைப்படுத்துவேன். வாரணாசி படம் இந்திய நாடே பெருமைப்படும்.அடுத்த 2027ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும். ஒரு புராண கதையில் நடிக்கும் படி என் அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். அப்போது அவரது பேச்சை கேட்கவில்லை. இப்போது கேட்டுள்ளேன் என்றார்.