வா வாத்தியார் படம் பொங்கலுக்கும் வராதாம் !

வா வாத்தியார் படம் பொங்கலுக்கும் வராதாம் !
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முதலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 12ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்தது. இந்த நிலையில் பிரச்சனையை சுமூகமாக பேசி முடித்து படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு முயற்சி மேற்கொண்டது. அதோடு படத்தை வெளியிட அனுமதி கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனு செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர். இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் நீடிக்கிறது.

Comments (0)
Add Comment