காதலர் தினத்தில் உயிருள்ளவரை உஷா
டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதியன்று ரிலீசான
படம் உயிருள்ளவரை உஷா. இந்த படத்தில் கதாநாயகியாக நளினி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கங்கா ஹீரோவாக நடிக்க, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர்.படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு இதில் இடம் பெற்ற அடி என்னடி, இந்திர லோக சுந்தரி, வைகை கரை காற்றே நில்லு, கட் அடிப்போம், இதயமதை கோவில் என்றேன் உள்பட அனைத்து பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருந்து வருகிறது.இந்நிலையில் படம் வெளியாகி 43 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா படம் மீண்டும் வரும் 13-ந் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.4கே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, நவீன சவுண்ட் டிசைன் உடன் திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர்கள் விக்ரமன், ஆர். கே. செல்வமணி, நடிகர் ராதாரவி, நடிகை நளினி ஆகியோர் கலந்து கொண்டனர்.