உருட்டு உருட்டு-விமர்சனம்
வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் குடித்து விட்டு வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிரு க்கும் கஜேஷ் நாகேஷ்சை ரித்விகா ஸ்ரேயா விரட்டி விரட்டி காதலிப்பதுடன் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். இறுதியில் மாதுவா, மதுவா என இரண்டில் எதை தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே படத்தில் மீதி கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ் ஊர் சுற்றுவதும், போதைக்கு அடிமையாவது ம் என தனது கேரக்டருக்கு உயிர் கொடுத்து நடித்துள்ளார்.காதலியாக வரும் ரித்விகா ஸ்ரேயா இயல்பான இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் காமெடி என்ற பெயரில் கடித்துள்ளனர். தற்போதைய காலத்துக்கு அவசியமான கதையை சரியான திரைக்கதை எழுதாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.அருணகிரியின் இசை, யுவராஜ் பால்ராஜ் ஓளிப்பதிவு சுமார் ரகம்.