நம்பி வாங்க, மகிழ்ச்சியா போங்க…: அர்ஜுன் தாஸ்

நம்பி வாங்க, மகிழ்ச்சியா போங்க…: அர்ஜுன் தாஸ்
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கான் சிட்டி. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி. கணேஷ் அருள் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. இதை ஒட்டி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியது, கான் சிட்டி’ குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எங்களை நம்பி தியேட்டருக்கு வாங்க, படம் பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் போங்க… என்றார்.

Comments (0)
Add Comment