ஃபகத் பாசிலுடன் நடிக்க விரும்பும் திரிஷா

ஃபகத் பாசிலுடன் நடிக்க விரும்பும் திரிஷா
தக்லைப் படத்தில் நடித்துள்ள திரிஷா, அதன் பிரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் திரிஷா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி திரிஷாவிடம் நீங்கள் எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ‘சந்தேகமே வேண்டாம். ஃபகத் பாசில்தான். அவர் எந்த மாதிரியான ஜானரில் நடித்தாலும் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கண்டிப்பாக அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Comments (0)
Add Comment