மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திரிஷா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா
குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் ஏஜிஎஸ் இல்ல திருமணத்திற்கு விஜயுடன் ஒன்றாக அவர் சென்ற வீடியோ காட்சிகள் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து பார்த்திபன் கூறிய கருத்து, அவரை டென்ஷன் ஆக்கி பதில் பதிவு போட வைத்தது. இந்த நிலையில் தனது செல்லப் பிராணியுடன், அனுமன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றதாக அவர் போட்டுள்ள பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.நாயுடன் எப்படி கோவிலுக்கு செல்லலாம் என பலர் ஆதங்கப்பட்டு அவருக்கு எதிராக கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment