வெப் தொடரில் நடிக்கும் திரிஷா

வெப் தொடரில் நடிக்கும் திரிஷா
சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள திரிஷா தற்போது புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடரை நந்தினி ரெட்டி இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஇண்டி பங்காரம் படத்தின் இயக்குனர்ஆவார். அடுத்ததாக திரிஷா நடிப்பில் வெப் தொடரை இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிஷா நடிக்க இருக்கும் இந்த தொடர் இயற்கைக்கு அப்பாற்பட்டசம்பவங்களை மையமாக கொண்ட திரில்லர்கதையாக உருவாக இருக்கிறது.

Comments (0)
Add Comment