‘லிங்கம்’ படத்தில் டிரெய்லர் ரிலீஸ்
ஜியோஹாட்ஸ்டாரின் அடுத்த தமிழ் ஒரிஜினல் தொடரான லிங்கம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. குற்றம், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகிய அம்சங்களோடு உருவாகியுள்ள இதில் கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். 1990களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட சம்பவம் தான் கதை, ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நிகழும் வெடித்துச் சிதறும் மாற்றத்தை விறுவிறுப்பான குற்றம் மற்றும் பழிவாங்கல் கதையாக சொல்கிறது இத்தொடர். ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் வரும் 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.