நயன்தாரா கவின் நடித்துள்ள ‘ஹாய்’ பட டிரெய்லர் ரிலீஸ்
நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்,காம் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன்இயக்கியுள்ளார். இதில் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய,ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகுது.