டாக்ஸிக்- விமர்சனம்
கோவாவில் 1947ல் நடக்கும் வன்முறை கலந்த கேங்ஸ்டர் கதை. கோவாவில் அக்கா நயன்தாராவின் பாசம், மற்றும் தியாகத்தால் வளர்ந்து தாதாவாக மாறி இருக்கும் யாஷ், கோவா டான் ஒருவரின் மகளான லாராவை, யாஷ்க்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. அப்போது அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் கியாரா அத்வானி மீது யாஷ் காதல் வயப்பட பிரச்னை தொடங்கிறது. இதனால் டான் கோமடைய, வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகிறது. அக்கா, தம்பிக்கு என்ன நடந்தது? கியாரா அத்வானி கதி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கமான பழிவாங்கும் கேங்ஸ்டர் கதையை ரத்தம், வன்முறை, சண்டை, வெட்டு, குத்து, துப்பாக்கி, வெடிகுண்டு, பழிவாங்கல் மற்றும் கொஞ்சம் பாசம் என கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கீது மோகன் தாஸ். பெண் இயக்குனர் என நம்பி போனால் உசுருக்கு உத்திரவாதம் இல்லை. அந்த அளவுக்கு படத்தில் உச்சகட்ட வன்முறை. கே ஜி எஃப் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ், இந்தப் படத்தின் மூலம் உலக புகழ் பெறலாம் என நினைத்து அதே போல் ஒரு கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். இருப்பினும் அவருடைய எண்ணம் ஈட வில்லை. ஆனால் படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. அக்காவாக நடித்துள்ள நயன்தாராவுக்கு அற்புதமான கேரக்டர். அதை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஹீரோயினான லாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் ஆகியோர் கதைக்கு கிளாமர் கூட்டி உள்ளனர். வில்லியாக ஹீமோகுளோசி மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இருப்பினும் படத்தின் நீளம் ரசிகர்கள் பொறுமையை சோதிக்கிறது.