ஐஸ்வர்யா ராஜேஷ்யை தொட்​டால் ஷாக் அடிக்​குமாம்..!!

ஐஸ்வர்யா ராஜேஷ்யை தொட்​டால் ஷாக் அடிக்​குமாம்..!!
​ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்​திரத்​தில் நடித்​துள்ள படம்​ ‘ஓ…! சுகு​மாரி’. இதில் வீர் கதா​நாயக​னாக நடிக்​கிறார். இதில் ஜான்​சி, விஷ்ணு ஓலட்​டு, ஆமணி, முரளிதர், ஆனந்த் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.அறி​முக இயக்​கு நர் பரத் தர்​ஷன் இயக்​கும் இப்​படத்​தைக் கங்கா என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனம் சார்​பில் மஹேஸ்​வர் ரெட்டி மூலி தயாரிக்​கிறார்.இப்​படம் தெலுங்​கு, தமிழ், மலை​யாள ம், கன்​னட மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. நாயகியைத் தொட்​டால் ஷாக் அடிக்​கும் என்​பது போன்ற கதையைக் கொண்ட இப்​படத்​தின் டீஸர் வெளியாகி 2 மில்லியன் அளவிற்கு வரவேற்​பைப்  பெற்​றுள்ளது. இப்​படம் பற்றி ஐஸ்​வர்யா ராஜேஷ் கூறும்​போது, இப்​படம் தென்​னிந்​திய ரசிகர்​கள் இது​வரை கண்​டி​ராத புதிய பாணியிலான கதையைக் கொண்​டது. நிச்​சய​மாக சிறந்த பொழுது ​போக்​குத் பட​மாக இருக்​கும் என்றார்.

Comments (0)
Add Comment