டி.என்.2026 டீசர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்டி
கண்ணன் ரவி, தீபக் ரவி ஆகியோர் தயாரிப்பில் உமாபதி எஸ்.ராமய்யா இயக்கி உள்ள படம் ‘டி.என்.2026’. முழுநீள அரசியல் காமெடி படமாக உருவாகி உள்ள இதில் ஹீரோவாக நட்டி நடராஜ் நடித்துள்ளார். மேலும் தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, விஜி சந்திரேசகர், இந்திரஜா
உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் 10-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. டீசரில் த.வெ.க. தலைவர் விஜயின் அரசியல் வருகையை மறைமுகமாக தாக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தன. இது விஜய் ரசிகர்களை கொதிப்படைய செய்தது. இதனால் இந்த டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற நட்டியிடம், டீசரில் விஜய் எமிடேட் செய்தது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,‘விஜய் நிஜமாகேவ சிங்கம். அவைர யாரும் குைறத்து பேச முடியாது. அவரை நான் பக்கத்தில் இருந்து பார்த்து உள்ளேன். இதுகுறித்து அவரிடம் நேரடியாக சென்று விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன் என்றார்.