பெண்களுக்கு சுவாசிகா தரும் டிப்ஸ்
‛லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுவாசிகா. அதன் பிறக மாமன், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கருப்பு படத்தில் நடித்துள்ளார்.சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது , 15 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். நான் அதுபோன்று எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவர் தவறாக நடக்க முயன்றால் அவர சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது என்றார்.