ரஜினி,கமல் இணையும் படத்தின் கதை இதுதான்!

ரஜினி,கமல் இணையும் படத்தின் கதை இதுதான்!
கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், தற்போது ரஜினி ,கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை சைமா விருது விழாவில் கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே கமல் நடித்த விக்ரம் படத்தையும், ரஜினி நடித்த கூலி படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளதால்,இந்த படத்தையும் அவரை வைத்து இயக்க முடிவு செய்து உள்ளனர். கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இதில் வயதான 2 கேங்ஸ்டர்களுக்குள் நடக்கும் யுத்தம் தான் கதையாம்.

Comments (0)
Add Comment