சிஎஸ்கே ‘ரோர் 26′ இயக்குனர் இவர்தான்!!
அதர்வா, சமந்தா நடித்த பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக இயக்கியுள்ளார். அந்த வகையில், சைமா மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இயக்கிய அவர் சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ரோர் 26’ என்ற கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.இதில் எம்.எஸ். தோனி,ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான் களுடன், சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இதுவரை 3 படங்களை இயக்கியுள்ள பத்ரி வெங்கடேஷ், அடுத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.