இது தாலி சென்டிமென்ட் படம்:காந்தி கிருஷ்ணா

இது தாலி சென்டிமென்ட் படம்:காந்தி கிருஷ்ணா
‘செல்லமே’ ‘ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர் காந்தி கிருஷ்ணா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரேக் பாஸ்ட்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் பிக் பாஸ் ராணவ் ரோஸ்லின், கிருத்திக்மோகன், அமிதா ரங்கநாதன், அர்ச்சனா சம்பத், ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரேம் கிளாசிக் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளில் விரைவில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது குறித்து காந்தி கிருஷ்ணா கூறியது,‘தற்போதைய சூழலில் திருமணம் என்ற புரிதல் இளைய தலை முறையினருக்கு இல்லாமல் போய் விட்டது. குறிப்பாக தாலியின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. பலரது வீடுகளில் காட்சி பொருளாக ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக் கிறது.திருமணம் மற்றும் தம்பதியிடையே உள்ள புரிதல்களை விவரிக்கும் கதையாக இது இருக்கும் என்றார்.

Comments (0)
Add Comment