என்னை மொக்கை பீசாக பார்த்தாங்க : விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எல்.ஐ.கே.’ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இன்று 10-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் பேசியது,‘நான் மிகப்பெரிய படம் இயக்க வாய்ப்பு வந்தது. கல்யாணத்தில் தாலி கட்டும் போது மாப்பிள்ளை எழுந்து போய் விட்டால் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கிறது எத்தனை கஷ்டமோ, அதுபோல தான் ஒரு படம் டிராப்பில் இருந்து அடுத்த படத்திற்கு டேக் ஆப் ஆகிறது கஷ்டம். அந்த நேரத்தில் என்னை ஒரு மொக்கை பீசாக பார்த்தாங்க, இது போல் நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். தியேட்டருக்கு வருகிற பார்வையாளர்களை நம்பி வாழ்கிறவன் நான் என்றார்.