குத்துப் பாடலுக்கே கூப்பிடுகிறார்கள்: தமன்னா வேதனை

குத்துப் பாடலுக்கே கூப்பிடுகிறார்கள்: தமன்னா வேதனை
இந்திய சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் “காவாலய்யா” பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. அதோடு வேறு சில படங்களில் இது போன்ற “ஐட்டம் பாடல்களுக்கு” அவர் நடனமாடி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியது,“சவால் தரும் கதாபாத்திரங்களை நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால், “ஐட்டம் பாடல்களுக்கு” மட்டுமே என்னை அதிகம் அணுகுகிறார்கள். ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி ஒரு நடிகையாக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையிலான கேரக்டர்களை இயக்குனர்கள் எனக்குத் தர வேண்டும் என தனது வருத்தத்தை அவர் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment