ரஜினி சொன்ன வார்த்தை தான் என் ஹீரோவாகியது: அபிஷன் ஜீவிந்த்

ரஜினி சொன்ன வார்த்தை தான் என் ஹீரோவாகியது: அபிஷன் ஜீவிந்த்
மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த 6-ந் தேதி ரிலீஸ் ஆன படம் வித் லவ். இந்த படத்தை சியோன் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்.ஆர்.பி. என்டர்டெயின் மென்ட் சார்பில் மகேஷ் ராஜ் பசலியான் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது இதில் நடிகர் அபிஷன் ஜீவந்த் பேசியது, ரஜினி சார் சொன்ன அந்த வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்க வைத்தது. இந்த படத்தில் நம்பிக்கை வைத்து நடிக்க தூண்டியது. படம் வெற்றி பெற்று அவரை மீண்டும் சந்தித்தபோது, ஹீரோ ஆகிட்டீங்க என அவர் சொல்லும்போது அந்த சர்க்கிள் கம்ப்ளீட் ஆன ஒரு பீல் இருந்தது
என்றார்.

Comments (0)
Add Comment