விஜய் சேதுபதி நடித்த முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் வெற்றி
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், ஜியோ ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் மணிகண்டன், அஜித் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “முத்து என்கிற காட்டான்” என்கிற வெப் சீரிஸ் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில், மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினருடன் இணைந்து விஜய் சேதுபதி கேக் வெட்டி கொண்டாடினார்.