கிராம மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ பர்ஸ்ட் லுக்

கிராம மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ பர்ஸ்ட் லுக்
இன்றைய காலகட்டத்தில் படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிட் டு வருகின்றனர். ஆனால், ’என்ன விலை’ படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். கலாமயா சினிவர்ஸ் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரித்திருக்கும் இப்படத்தை சஜீவ் பாழூர் இயக்கியுள்ளார்.இதில் கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

Comments (0)
Add Comment