வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ படத்தின் டிரெய்லர்
இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென் ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது மகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக இப்படம் உருவாகியுள்ளது.