சூர்யா படத்தின் டைட்டில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’
கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இதில்
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி. வி.பிரகாஷ் இசை அமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி இடம் பெற்றுள்ளது.இதன் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப் படுகிறது.