விஷால் படத்தின் டைட்டில் மகுடம்
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். பி.செளத்ரி தயாரிக்கிறார். இப்படம் அவர் தயாரிக்கும் 99 வது படமாகும். இதில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விஷால் 35 என்ற பெயரில் பூஜை போட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று இந்த படத்தில் டைட்டில் டீசர் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், படத்திற்கு மகுடம் என டைட்டில் வைத்து அதோடு டீசரும் வெளியானது. டீசரில் நட்சத்திர மீன் கப்பல் நங்கூரம் என கடல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால், இது கடல் சம்பந்தமான கதையாக இருக்கும் என தெரிகிறது.