படைத்தலைவனுக்கு வந்தது விடிவுகாலம்

படைத்தலைவனுக்கு வந்தது விடிவுகாலம்
அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில், நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படைத்தலைவன். இதில் கஸ்தூரிராஜா, யாமினி,சுந்தர், முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். காட்டு யானைகளுக்கு நடுவே வாழும் ஒரு மனிதனைப் பற்றிய கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இளையராஜா இசை அமைத்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி பலமுறை வெளியீட்டு தேதி அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் வாங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் 23-ந் தேதி திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment