100 மில்லியன் பேர் ரசித்த “தடயம்” சீரிஸ்
ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீ 5 நிறுவன கிரியேட்டிவ் ஹெட் கௌஷிக் நரசிம்மன், காக்டெய்ல் சினிமாஸ் சார்பில் அஜய் கிருஷ்ணா, இசையமைப்பாளர் விபின் பாஸ்கர்,ஒளிப்பதிவாளர் கேகே, எடிட்டர் தினேஷ் குமார், இயக்குநர் நவீன்குமார் பழனிவேல்,நடிகர் ராஜ்கிரண் தாஸ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர் பிரேம் மற்றும் கதாநாயகன் சமுத்திரகனி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றி கேடயம் பரிசாக வழங்கப்பட்டது